close
Choose your channels
capmaari
capmaari
champion

தல 56' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பின் தேதி

Friday, August 14, 2015 • தமிழ் Comments

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் சென்னை, வெளிநாடு மற்றும் கொல்கத்தா  என மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 


இந்த படப்பிடிப்பில் அஜீத்-லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்படவுள்ளதாக தெரிகிறது. மேலும் அஜீத் தொடர்ந்து நான்கு வாரங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த படப்பிடிப்புடன் படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்றும் அதன்பின்னர் பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியிருக்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் டைட்டில் குறித்து படக்குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், விரைவில் டைட்டில் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

 

Get Breaking News Alerts From IndiaGlitz