close
Choose your channels

அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா?

Saturday, December 4, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அஜித் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ள அஜித் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை ’வலிமை’ இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அஜீத்தின் சம்பளம் 50 கோடி என்று தகவல்கள் கசிந்துள்ளன. தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரும் 100 கோடி சம்பளம் பெற்று வரும் நிலையில் அதற்கு அடுத்த நிலையில் அஜீத் மிகப் பெரிய சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz