அஜர்பைஜானில் இருந்து திடீரென சென்னை திரும்பிய அஜித்.. 'விடாமுயற்சி' படக்குழு எங்கே?


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில் திடீரென அஜித் மட்டும் சென்னை திரும்பி உள்ளதாகவும் ’விடாமுயற்சி’ படக்குழுவினர் துபாய் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அஜித், த்ரிஷா நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்த படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற இருப்பதாக தெரிகிறது.
இதற்காக ஐந்து நாட்கள் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்ட நிலையில் அந்த இடைவெளியில் அஜித் சென்னை திரும்பி உள்ளார். ஆனால் ‘விடாமுயற்சி படக்குழுவினர் அஜர்பைஜானில் இருந்து நேராக துபாய் செல்வதாகவும் அஜித் இன்னும் ஒரு சில நாட்களில் சென்னையில் இருந்து துபாய் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித், சென்னை விமான நிலையத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
EXCLUSIVE 🥳
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 24, 2023
Latest Video Of THALA Ajith From Chennai Airport..🤩 #VidaaMuyarchi | #AjithKumar pic.twitter.com/8cqIkg2kUl
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments