close
Choose your channels
Don
Nenjukku Needhi

அஜித் பட நாயகியுடன் ரக்சன்: 'குக் வித் கோமாளி 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா?

Sunday, January 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரக்சன், அஜித் பட நடிகையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அந்த நடிகை கலந்துகொள்ள இருக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

‘குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது என்பதும் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது என்பது தெரிந்தது. இந்த நிகழ்ச்சியின் குக்குகளாக மனோபாலா, பாடகர் அந்தோணி, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ்குமார், உள்ளிட்டவர்களும் கோமாளிகளாக பாலா, மணிமேகலை, ஷிவாங்கி, பரத், குரேஷ், ஷீத்தல், சுனிதா உள்பட ஒருசிலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்சன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் ரக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தின் ’அசல்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை பாவனா உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை பாவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.