அஜித்தால் உடல் எடையை இவ்வளவு குறைக்க முடியுமா? வைரல் புகைப்படம், வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொஞ்சம் அதிகமான உடல் எடையுடன் இருந்தார். ஆனால் தற்போது தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து, ஒல்லியாக மாறியுள்ளார். இந்த மாற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படம் இணையத்தில் பரவி, ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர், அவர் நடித்த ’குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது அஜித், கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். துபாயில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அவர், அடுத்து போர்ச்சுகல் நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில், அஜித் கார் ரேசிங் பயிற்சி பெறும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதோடு, அவர் உடல் எடையை குறைத்ததன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், சைக்கிள் பயிற்சி செய்யும் வீடியோவையும், அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "அஜித்தால் இவ்வளவு உடல் எடையை குறைக்க முடியுமா?" என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான "திருப்பதி" திரைப்படத்தில் எப்படி அவர் ஒல்லியாக இருந்தாரோ, அதேபோல் தற்போது மீண்டும் உள்ளார் என்று பலரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Looks who’s ready to go cycling with us as preparation for the races 🔥🔥🏁🏁
— Fdx89 (@fabian_fdx89) February 14, 2025
Can’t wait to do our first KM together 🚴@Akracingoffl pic.twitter.com/wd8BFzrzO0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com