close
Choose your channels
Anbirkiniyaal

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனால்... அக்சராஹாசன்

Friday, August 11, 2017 • தமிழ் Comments

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல்ஹாசனின் இளையமகள் அக்சராஹாசனுக்கு இதுதான் முதல் தமிழ் படம். தாய்மொழியில் நடித்த முதல் படம் என்பதை இந்த படம் குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும் இருப்பினும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற படமாக விவேகம்` இருக்கும் என்றும் மக்களின் வரவேற்பை எதிர்கொள்ள ஆவலோடு காத்திருப்பதாகவும் பேட்டி ஒன்றில் அக்சராஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் குறித்து அவர் கூறியபோது, 'அஜித் சார் எப்போதுமே உண்மையான அன்புடன் இருப்பார். எந்தவொரு பிரச்சினையிருந்தாலும் ரொம்ப அமைதியாக ஓ.கே.` என்பார். அவரிடமிருந்து திரையுலக வெற்றியைக் கையாளும் விதத்தைக் கற்றுக்கொண்டேன். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனால், அவருடைய பேச்சில் அது தெரியவில்லை என்று அக்சராஹாசன் கூறினார்.

மேலும் இந்த படத்தின் கதையை இயக்குனர் சிவா என்னிடம் கூறுவதற்கு முன்பே இந்த கேரக்டருக்கு நீங்கள் மட்டுமே சரியாக இருப்பீர்கள் என சிவா சார் சொன்னார். வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த கதாபாத்திரம் என்பதால் பொருத்தமாக இருப்பீர்கள் என்று கூறிவிட்டுத்தான் கதையையே சொன்னார். கதையைக் கேட்டதும் அவர் கூறியது சரி என்பது எனக்கு புரிந்தது' என்றும் அக்சராஹாசன் மேலும் தெரிவித்தார்.

Get Breaking News Alerts From IndiaGlitz