close
Choose your channels
PatamPoochi
mayoon

அஜித்தின் 'விஸ்வாசம்' இந்தி ரீமேக்கிற்கு போட்டி போடும் 2 பிரபலங்கள்!

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இரண்டு பிரபல நடிகர்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், நயன்தாரா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவான திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்த திரைப்படம் சுமார் 200 கோடி வரை வசூல் செய்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த திரைப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் இந்த திரைப் படத்தின் ரீமேக்கில் நடிக்க இரண்டு பிரபல நடிகர்கள் போட்டி போடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகிய இருவரும் முன்வந்துள்ளதாகவும் விரைவில் இருவரில் யார் இந்த படத்தில் நடிப்பார்கள் என்று உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித் நடித்த ’வேதாளம்’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதும் இதில் அஜித் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவியும் லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அஜித் நடித்த ’வீரம்’ திரைப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.