close
Choose your channels
Raayan

'விடாமுயற்சி' லுக் இதுதான்.. வைரலாகும் அஜித்தின் லண்டன் புகைப்படம்..!

Saturday, June 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விடாமுயற்சி’ என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக அஜித் மற்றும் மகிழ் திருமேனி ஆகிய இருவரும் லண்டன் சென்று போட்டோஷூட் பணியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் புனேவில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித் லண்டன் சென்று இருக்கும் நிலையில் அங்குள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் இருக்கும் தோற்றம்தான் அஜித்தின் ’விடாமுயற்சி’ கெட்டப் என்றும் கூறப்படுகிறது. இந்த கெட்டப் அட்டகாசமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment