close
Choose your channels
NMM
NMM

'வலிமை' இறுதி கலெக்சன் இவ்வளவுதானா? போனிகபூர் ரூ.200 கோடின்னு சொன்னது என்னாச்சு?

Friday, April 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் தற்போது தூக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகம், இந்தியா மற்றும் உலகம் முழுவதுமான ’வலிமை’ படத்தின் கலெக்சன் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தமிழக வசூல் ரூபாய் 99 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தெலுங்கு மாநிலங்களில் 6.30 கோடி, கர்நாடகாவில் 6.40 கோடி, கேரளாவில் ரூ 2.95 கோடி, வட இந்தியாவில் 4.30 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. ஆகமொத்தம் இந்தியாவில் மொத்தம் 118.95 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

’வலிமை’ திரைப்படம் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ரூ.36.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் சேர்ந்து ’வலிமை’ படத்தின் மொத்த வசூல் ரூ.155.45 கோடி என டிரேடிங் வட்டாரங்கள் கூறியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’வலிமை’ திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தயாரிப்பாளர் போனிகபூர் கூறிய நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விபரங்கள் முற்றிலும் மாறுபட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.