close
Choose your channels

அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்குமா வலிமை? படக்குழுவினரின் புதிய திட்டம்!

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் முதல்நாளில் வசூல் சாதனையை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

பொங்கல் திருநாளில் ’வலிமை’ ரிலீஸ் என்று கூறப்பட்டாலும் இந்த படம் ஜனவரி 13 அல்லது 14 இல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது அதிகாலை காட்சிக்கு அனுமதி பெறுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் அதிகாலை 4 மணி முதல் முதல் காட்சி தொடங்கும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வலிமை’ படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சிக்காக சிறப்பு அனுமதி பெற படக்குழுவினர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு நடந்தால் ’வலிமை’ திரைப்படம் முதல் நாளில் ஏழு அல்லது எட்டு காட்சிகள் திரையிட வாய்ப்பிருப்பதாகவும் இதனால் ’வலிமை’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz