close
Choose your channels
NMM
NMM

'வலிமை' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

Friday, February 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் அஜீத் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் பிடித்துள்ளது என்று கூறி வருகின்றனர். எச்.வினோத் படம் என்பதால் எந்த விதமான லாஜிக் மிஸ்டேக் இருக்காது என்று எதிர் பார்த்து வந்த ரசிகர்களுக்கு சில அதிருப்திகள் இருந்தாலும் ‘வலிமை’ படத்தின் முதல் நாள் வசூலை பார்த்து கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளன.

‘வலிமை’ திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் 70 முதல் 75 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் உலகம் முழுவதும் நேற்று ‘வலிமை’ ரிலீசான நிலையில் நேற்றைய முதல் நாளில் மிகப்பெரிய வசூல் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் ‘வலிமை’ திரைப்படம் தமிழகத்தில் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் முதல் நாளில் 35 முதல் 36 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் குறிப்பாக சென்னையில் மட்டும் 1.82 கோடி ரூபாய் ‘வலிமை’ திரைப்படம் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு என்பது குறித்து போனிகபூர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.