close
Choose your channels
Por
Joshwa

'துணிவு' டிரைலர் ரன்னிங் டைம் இவ்வளவா? அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த ட்ரெய்லரில் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த ட்ரெய்லர் 2 நிமிடம் 18 விநாடிகள் என்றும் ஒவ்வொரு காட்சியிலும் அதிரடி பஞ்ச் வசனங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ட்ரெய்லரில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’துணிவு’ படத்தில் நடித்த 8 முக்கிய கேரக்டர்களின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் அஜித்தின் கேரக்டரை மட்டும் படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய ட்ரெய்லரில் அவரது கேரக்டர் என்ன என்பதும் தெரிந்துவிடும். இந்த நிலையில் அஜித், அந்தோனி என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இன்று இரவு 7 மணிக்கு இணையதளங்களில் டிரெய்லர் வெளியானாலும் உலகம் முழுவதும் புர்ஜ் கலீபா, டைம்ஸ் ஸ்கொயர் போன்ற முக்கிய இடங்களில் இந்த டிரைலரை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் இன்று அஜித்தின் ’துணிவு’ திருவிழா உலகம் முழுவதும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.