close
Choose your channels

அட்டகாசமான அஜித்தின் 3 தோற்றங்கள்.. 'குட் பேட் அக்லி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Sunday, May 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இன்று மாலை 6.31 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்த வகையில் சொன்னபடியே மிக சரியாக 6.31 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அதில் அஜித் அட்டகாசமான மூன்று கெட்டப்புகளில் இருக்கும் காட்சி உள்ளது. அஜித் எதிரே உள்ள டேபிளில் துப்பாக்கி உள்பட ஆயுதங்கள் இருக்க அஜித்தின் மூன்று வித்தியாசமான கெட்டப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ’குட் பேட் அக்லி’ படத்தின் மூன்று தோற்றங்களில் அஜித் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதனை உறுதி செய்துள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் பொங்கல் ரிலீஸ் என்பது மீண்டும் ஒரு முறை இந்த போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.