close
Choose your channels

அஜித்தின் 'குட் பேட் அக்லி' பர்ஸ்ட் லுக் வெளியாக இந்த 700 பேர் காரணமா? ஆச்சரிய தகவல்..!

Tuesday, May 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இப்போது வெளியிட படக்குழுவினர் திட்டமிடவில்லை என்றும் ஆனால் திடீரென இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதற்கு 700 பேர்கள் தான் காரணம் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

’குட் பேட் அக்லி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் ஆக்சன் காட்சிகளை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படமாக்கிய நிலையில் இந்த படத்தின் செட் அமைக்க மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் பங்கேற்க 700 ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடைய உதவியால்தான் இந்த ஸ்டண்ட் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த காட்சிக்காக வேலை செய்த 700 ஊழியர்கள் அஜித்துடன் செல்பி எடுக்க விருப்பப்பட்டதாகவும், ஆனால் இயக்குனர் அதற்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அஜித் முக்கியமான கெட்டப்பில் இருக்கும் போது செல்பி எடுத்தால் அந்த புகைப்படம் லீக் ஆகிவிடும் என்று கூறிய நிலையில் தான் அஜித் உடனடியாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு விடுங்கள் அப்போது இவர்களுடன் செல்பி எடுத்தால் பிரச்சனை இருக்காதே என்று கூறியதாகவும் இதனை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்ததாகவும் தெரிகிறது.

அந்த வகையில் 700 பேர் தன்னுடன் செல்பி எடுக்க விருப்பப்பட்ட நிலையில் அவர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காகவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.