close
Choose your channels
Viruman
Laal

தீபாவளி ரிலீசில் இருந்து தள்ளி போகிறதா அஜித்தின் 'ஏகே 61?

Tuesday, June 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப் பயணத்தில் இருக்கும் அஜித், இந்தியா திரும்பியவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியார் இணைந்து கொள்வார் என்றும் மேலும் சில நட்சத்திரங்கள் இந்த படப்பிடிப்பில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’ஏகே 61’ திரைப்படத்தை வரும் தீபாவளியன்று திரையிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தான் முடிவடையும் என்றும் அதனால் தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தீபாவளி அன்று சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ கார்த்தியின் ’சர்தார்’ மற்றும் ஜெயம் ரவியின் ’இறைவன்’ மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.