close
Choose your channels
Viruman
Laal

அஜித்தின் 'ஏகே 61' படத்தின் மாஸ் அப்டேட்!

Friday, April 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணாசாலை செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஏகே 61’ படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக வங்கிக் கொள்ளை அடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பில் படக்குழுவினர் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.