close
Choose your channels

என்னை இனிமேல் இப்படி கூப்பிட வேண்டாம்: அஜித்தின் வேண்டுகோள் அறிவிப்பு!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments

அஜித்தை தல அஜித் என்று ஒருசில ஊடகங்களும் ரசிகர்களும் தெரிவித்துவரும் நிலையில் என்னை ’தல’ என்று கூப்பிட வேண்டாம் என அஜீத் வேண்டுகோள் விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அஜீத்தின் மேனேஜரின் சமூக வலைத்தளத்தில் அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போது, என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ, அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது.

’தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்’ என்று அஜீத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz