close
Choose your channels
NMM
NMM

'துணிவு'க்காக பாங்காக் புறப்பட்ட அஜித்: எத்தனை நாள் படப்பிடிப்பு தெரியுமா?

Saturday, September 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பாங்காக் சென்று உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அஜித் பாங்காக் கிளம்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் 20 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இத்துடன் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அஜித் மஞ்சு வாரியார், ஜான் கொகைன் உள்ளிட்ட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை இந்த படப்பிடிப்பில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், மஞ்சுவாரியர், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.