close
Choose your channels
Viruman
Laal

அட்லாண்டிக் பெருங்கடலில் அஜித்: செம புகைப்படங்கள்!

Tuesday, June 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் கடந்த சில நாட்களாக இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டிலிருந்து அவர் பெல்ஜியம் நாட்டிலும் அட்லாண்டிக் கடல் வழியே செல்லும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

அஜித் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து அவர் தற்போது பெல்ஜியம் நாட்டில் பைக் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இங்கிலீஷ் சேனலை கடப்பதற்காக அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலில் அஜித் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை அவருடன் சென்ற குழுவினர்களில் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டுள்ளது. மேலும் 26 ஐரோப்பிய நாடுகளில் அஜித் பைக் பயணத்தை மேற் கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’அஜீத் 61’ படத்தில் நடித்து வரும் அஜீத், இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் புனேவில் நடைபெற உள்ள இந்த படப்பிடிப்பில் மஞ்சுவாரியர் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.