'விடாமுயற்சி' ரிலீஸ் தினத்தில் அஜித் என்ன செய்கிறார் தெரியுமா? வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ’விடாமுயற்சி’ சி திரைப்படம் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில், நடிகர் அஜித், போர்ச்சுக்கல் நாட்டில் கார் ரேஸ் பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை முதல் காட்சி முடிந்ததுமே, சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், ஒரு பக்கம் அஜித்தின் ’விடாமுயற்சி’ படம் ரிலீஸ் ஆகி, அவரது ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில், இன்னொரு பக்கம் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கார் ரேஸ் மைதானத்தில் அஜித் நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
’விடாமுயற்சி’ படத்தின் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல், முழு கவனத்தையும் தனது கார் ரேஸில் செலுத்தி வரும் அஜித்தின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Track day of Ajith sir in Estoril, Portugal circuit.
— Ajith (@ajithFC) February 5, 2025
| #AK #Ajith #AjithKumar | #AjithKumarRacing | #PSCSE | #PorscheSprintChallenge | #RedantRacing | #AKRacing | #VidaaMuyarchi | #GoodBadUgly | pic.twitter.com/xFoyDwefCF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com