close
Choose your channels
Viruman
Laal

'அஜித் 62' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்கவிருக்கும் 61வது திரைப்படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ‘அஜித் 62’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அஜித்தின் 62வது திரைப்படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீசாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அஜித் குமார் அவர்களுடன் இணைவதில் தங்கள் நிறுவனம் பெருமைப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து அஜித் 62 என்ற ஹேஷ்டேக் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.