close
Choose your channels
Por
Joshwa

என் மகளை காப்பாற்றுங்கள்; பிரதீப் இடம் பேசிய ஐஷுவின் அப்பா..!

Monday, November 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட பிரதீப் குறித்து இன்னும் போட்டியாளர்களும் சரி பார்வையாளர்களும் சரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய தாக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஷு எலிமினேஷன் செய்யப்படுவதற்கு முன்னர் பிரதீப் இடம் ஐஷு தந்தை வாட்ஸ் அப் மூலம் பேசியுள்ள ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதில் ’ஒவ்வொரு நாளையும் எப்படி கடப்பது என்று தெரியவில்லை, இந்த வாரம் ஐஷு வெளியே வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஒருவேளை நீங்கள் உள்ளே செல்ல வாய்ப்பு இருந்தால், தயவு செய்து நிக்சனிடம் இருந்து எனது மகளை காப்பாற்றுங்கள், ஒரு சகோதரனாக என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்று ஐஷு அப்பா சொல்லியுள்ளார்.

அதற்கு பிரதீப் ’நான் எப்படி உங்களுக்கு உதவி செய்வேன் என்று தெரியவில்லை, ஐஷு என் பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார், எனக்கு தெரிந்து இந்த வாரம் அவர் வெளியே வந்து விடுவார் என்று நினைக்கிறேன், அது மட்டும் நான் உங்களுக்கு கொடுக்கும் ஒரு வாக்குறுதி’ என்று தெரிவித்தார். ‘ஆனால் அதே நேரத்தில் நீங்கள் கவலைப்பட வேண்டாம், ஐஷு வலிமையான பெண், அவர் எதையும் சமாதித்துக் கொள்வார்’ என்றும் கூறியுள்ளார்.

அதற்கு ஐஷு அப்பா ’உண்மைதான், உங்கள் பெயரை எனது மகள் தவறாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அதற்கு மாயா, பூர்ணிமா தான் காரணம், தயவு செய்து ஐஷுவை மன்னித்து விடுங்கள், அவளுக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை’ என்று கூறினார்

’ஆனால் நீங்கள் உள்ளே போனால் ஐஷுவிடம் எல்லாவற்றையும் சொல்லி புரிய வையுங்கள், என்னால் வெளியே இருக்கும் வெறுப்புகளை தாங்க முடியவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்.

நவம்பர் 7ஆம் தேதி நடந்த இந்த உரையாடலை பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் திடீரென அதை நீக்கிவிட்டார். இருப்பினும் அது குறித்த ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.