close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

'தளபதி 67' படத்தை அடுத்து மாஸ் நடிகருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்!

Thursday, June 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாநகரம், ‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய நான்கு படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றதை அடுத்து அவர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமும் அவரது முந்தைய நான்கு படங்கள் போலவே அதிரடி ஆக்ஷன் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை முடித்துவிட்டு தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ‘விக்ரம்’ படத்தின் தெலுங்கு பதிப்பின் புரமோஷனின் போது ராம் சரணை, லோகேஷ் மற்றும் அனிருத் சந்தித்ததாகவும், அப்போது ஒன்லைன் கதையை லோகேஷ் கூறியதாகவும் அந்த கதை ராம்சரணுக்கு பிடித்து விட்டதை அடுத்து இருவரும் இணைந்து ஒரு படம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.