close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

இயக்குனர் ஹரியின் அடுத்த பட ஹீரோ இந்த பிரபல நடிகரா?

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், உருவான ’யானை’ திரைப்படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் ஹரி, இந்த படத்தின் வெற்றி மூலம் மீண்டும் கோலிவுட் திரையுலகில் ஒரு சுற்று வருவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு ’அகிலன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு அவர் ஹரியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ’வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அகமது இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் நாயகி நயன்தாரா என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.