எஸ்.ஜே.சூர்யாவுக்கு செல்வராகவன் கொடுக்க விரும்பும் பட்டம் இதுதான்.
Saturday, October 1, 2016 தமிழ் Comments
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ஃபைனல் கட்'ஐ சமீபத்தில் செல்வராகவன் பார்த்ததாகவும், அதில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும், அவருக்கு 'ராக் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுக்க விரும்புவதாகவும் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, ரெஜினினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.