விஜய், அஜித் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'பொன்னியின் செல்வன்': ஆச்சரிய தகவல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


2022 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகிற்கு நல்ல ஆண்டு என்றுதான் கூறவேண்டும். இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதும் தமிழ் சினிமாவின் பல கலைஞர்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் வசூலில் தெறிக்க வைத்த படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம். இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த போதிலும் முதல் நாள் வசூலில் இந்த படம் தான் முதலிடத்தில் உள்ளது.
‘பீஸ்ட்’ படட்த்தை அடுத்து முதல் நாளில் அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் அதிக வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் நேற்று வெளியான ’பொன்னியின் செல்வன்’ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய், அஜித் ஆகிய மாஸ் நடிகர்களின் படங்களுக்கு அடுத்த இடத்தை ‘பொன்னியின் செல்வன்’ பிடித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
முதல் நாள் வசூல் பட்டியலில் கமல்ஹாசன் ’விக்ரம்’ 4வது இடத்தையும் விக்ரம் நடித்த ’கோப்ரா’ 5வது இடத்தையும், சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ 6-வது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் வசூலில் தெறிக்க வைத்த திரைப்படங்களான ’பொன்னின் செல்வன்’ ’கோப்ரா’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய மூன்று படங்களுக்கும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments