close
Choose your channels
siren
lal_salaam

மீண்டும் விஜய்யுடன் மோதும் பிரபல நடிகரின் படம்.. 4 ஹீரோயின்கள் அறிவிப்பு..!

Saturday, April 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்துடன் வெளியான பிரபல நடிகரின் அடுத்த படம் விஜய் நடித்து வரும் ’லியோ’ வெளியாகும் தினத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான என்டிஆர் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவான ’சீரசிம்ஹ ரெட்டி’ கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக வெளியானது. இந்த படம் விஜய்யின் ’வாரிசு’ மற்றும் சிரஞ்சீவியின் ’வால்டர் வீரைய்யா’ ஆகிய இரண்டு படங்களுடன் மோதியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் நாயகிகளாக காஜல் அகர்வால், பிரியங்கா ஜவால்கர், ஸ்ரீலீலா மற்றும் ஹனிரோஸ் ஆகிய நான்கு நடிகைகள் நடிக்க உள்ளனர். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தை அனில்ரவிபொடி இயக்க உள்ளார்.

இந்த படம் ஆயுத பூஜை தினத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ‘லியோ’ படமும் ஆயுத பூஜை தினத்தில் தான் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படும் நிலையில் மீண்டும் விஜய், பாலகிருஷ்ணன் படங்கள் ஒரே நாளில் மோதுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.