close
Choose your channels
Raayan

'வாரணம் ஆயிரம்' அடுத்து தெலுங்கில் ரிலீசாகும் இன்னொரு சூர்யா படம்.. ரசிகர்கள் உற்சாகம்..!

Wednesday, November 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது என்பதும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படம் செம ரொமான்ஸ் படம் என்பதால் தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வரவேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹவுஸ்புல் காட்சிகளாக ’வாரணம் ஆயிரம்’ திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சூர்யாவின் இன்னொரு அதிரடி ஆக்சன் திரைப்படம் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா, தமன்னா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான ’அயன்’ திரைப்படம் தான் தெலுங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

’வாரணம் ஆயிரம்’ போலவே இந்த படமும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment