close
Choose your channels
NMM

'வலிமை' தள்ளிப்போனதால் பொங்கலுக்கு ரிலீஸாகும் ஆறு திரைப்படங்கள்!

Saturday, January 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு திரையரங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததை அடுத்து ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

திங்கள் முதல் சனி வரை மூன்று காட்சிகள் மட்டும் திரையரங்குகளில் திரையிடப்பட வேண்டும் என்றும், ஞாயிறு அன்று திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்றும், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அரசு விதித்த நிபந்தனை காரணமாக ‘வலிமை’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரசின் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பொங்கல் தினத்தில் ஆறு படங்கள் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் நடித்த ’கொம்பு வச்ச சிங்கம்டா’ விதார்த் நடித்த ’கார்பன்’ சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ , அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’, மற்றும் ‘ஐஸ்வர்யா முருகன்’, ‘மருத’ ஆகிய ஆறு திரைப்படங்கள் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸில் மாஸ் நடிகர்களின் படங்கள் இல்லாமல் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆவதால் இதில் வெற்றி பெறும் படங்கள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.