close
Choose your channels
sisa

தெலுங்கு, கன்னடத்தை அடுத்து இந்தியில் ரீமேக் ஆகும் விஜய்சேதுபதியின் சூப்பர்ஹிட் படம்!

Monday, September 20, 2021 • தமிழ் Comments

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த சூப்பர்ஹிட் படம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இந்த திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பெயரில் தெலுங்க் மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும், தெலுங்கில் த்ரிஷா நடித்த வேடத்தில் சமந்தா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் அஜய்கபூர் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz