close
Choose your channels

அதே மாலத்தீவு, அதே நயன்தாரா பாடல்: ஷிவானிக்கு போட்டியாக ஜனனி ஐயரின் வீடியோ!

Tuesday, March 30, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்தார் என்பதையும் பார்த்தோம். குறிப்பாக மாலத்தீவு கடற்கரையில் நயன்தாராவின் ’ஹெலனா’ பாடலுக்கு ஷிவானியின் ஸ்டைலிஷ் ஸ்டெப் கொண்ட வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷிவனியை அடுத்து பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரான ஜனனி ஐயர் மாலத்தீவு சென்றார் என்பதும் அவர் அங்கிருந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே மாலத்தீவு கடற்கரையில் அதே நயன்தாராவின் ’ஹெலனா’ பாடலுக்கு ஷிவானிக்கு போட்டியாக அசத்தலான ஸ்டெப் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


 

Get Breaking News Alerts From IndiaGlitz