close
Choose your channels
Rajavamsam

மாலத்தீவு சுற்றுலா சென்ற மேலும் ஒரு பிக்பாஸ் தமிழ் நடிகை!

Tuesday, March 30, 2021 • தமிழ் Comments

கடந்த சில மாதங்களாகவே மாலத்தீவுக்கு தமிழ் நடிகைகள் சென்று வருகின்றனர் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

காஜல் அகர்வால் உள்பட பல தமிழ் நடிகைகள் மாலத்தீவு சென்று திரும்பிய நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் பதிவு செய்த பிகினி புகைப்படங்கள் வீடியோக்கள் உள்பட பல புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 போட்டியாளரான ஜனனி ஐயரும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டு சுற்றுப் பயணம் செய்வதாக தனது இன்ஸ்டாகிராமில் ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவு சென்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவில் கடலருகே அழகிய பின்னணி காட்சியுடன் ஜனனி ஐயர் இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது நடிகை ஜனனி ஐயர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் என்பதும் அவர் மூன்றாவது ரன்னர் அப் போட்டியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz