சமந்தாவை அடுத்து ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடும் பிக்பாஸ் தமிழ் நடிகை!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ திரைப்படத்தில் நடிகை சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடினார் என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது மட்டுமின்றி இந்த படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புஷ்பா படத்தின் ஐட்டம் பாடலுக்கு சமூக வலைதளங்களில் பல பிரமுகர்கள் டான்ஸ் ஆடி வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமந்தாவை அடுத்து பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி உள்ளதாக தெரிவித்துள்ளார். வனிதா நடித்து வரும் படங்களில் ஒன்றான ’காத்து’ என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி உள்ளதாகவும் இந்த பாடலை கானா பாலா பாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கலர்கலரான காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களையும் வனிதா பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.