close
Choose your channels
Don
Nenjukku Needhi

'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த அனிருத்!

Saturday, July 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார் என்றும் இந்த பாடல் நாளை அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செய்தியைப் பார்த்தோம். இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அடுத்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மகேஷ்பாபு தற்போது நடித்து வரும் தெலுங்கு திரைப்படம் ’சர்காரு வாரி பாட்டா’ (Sarkaru Vaari Paata). இந்த படத்தில் ஒரு அதிரடி பாடலை அனிருத் பாடியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடியுள்ள அனிருத் தற்போது தெலுங்கிலும் பிசியான பாடகராக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் அனிருத் தற்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ’டான்’, ‘விக்ரம்’, ‘இந்தியன் 2’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.