close
Choose your channels

ரஜினி, மீனா, குஷ்புவை அடுத்து சதீஷ்: விறுவிறு 'அண்ணாத்த'

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். முதல்கட்டமாக ரஜினிகாந்த் தனது பகுதியின் டப்பிங் பணியை முடித்தார் என்றும் அதன் பின்னர் மீனா, குஷ்பு ஆகியோர்களும் டப்பிங் பணியை முடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினிகாந்த், மீனா, குஷ்புவை அடுத்து நடிகர் சதீஷ் தற்போது தனது பகுதி டப்பிங் பணிகளை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது ’அண்ணாத்த’ டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தலைவர் ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்கும் கனவை நனவாக்கிய இயக்குனர் சிவா, சன் பிக்சர்ஸ் நிறுவனம், கடவுள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் சிறுத்தை சிவாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz