close
Choose your channels

பிரதீப் ரங்கநாதனை அடுத்து இன்னொரு ஹீரோவுடன் மமிதா பாஜூ.. நடிகராகும் இசையமைப்பாளர்..!

Wednesday, May 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பிரேமலு’ என்ற மலையாள படத்தில் நடித்த நடிகை மமிதா பாஜூ, பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பிரதீப் ரங்கநாதனை அடுத்து இன்னொரு ஹீரோவின் படத்திலும் மமிதா பாஜூ நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் மீண்டும் நடிகராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’பிரேமலு’ என்ற படத்தின் வெற்றி காரணமாக தென் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மமிதா பாஜூ. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் அதிக வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சுதா கொங்கரா உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அதர்வா நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் மமிதா பாஜூ தான் நாயகி என்றும் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் தமன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமன், ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அதன் பிறகு இசையமைப்பாளர் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment