பிரதீப் ரங்கநாதன் பாணியில் ஹீரோவாகும் இன்னொரு இளம் இயக்குனர்.. தயாரிப்பாளர் யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' என்ற ஒரே ஒரு படத்தை இயக்கிய நிலையில், அடுத்த படமான 'லவ் டுடே' என்ற படத்தில் அவரே ஹீரோவாக நடித்து இயக்கினார் என்பதும், அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்தது.
அதனை அடுத்து, அவர் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவின் ஹீரோவாக மாறிவிட்டார் என்பது தெரிந்ததே. அவர் நடித்த ’டிராகன்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என்றும், தமிழ் சினிமாவில் பிசியான ஒரு ஹீரோவாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கவின் நடித்த 'ஸ்டார்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எலான், அடுத்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்தும், இயக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தனுஷ் உட்பட பல நடிகர்கள் இயக்குனராக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதீப் ரங்கநாதன், எலான் போன்ற இயக்குனர்கள் நடிகர்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com