close
Choose your channels
DJ

பொன்னியின் செல்வன்' பாணியில் புரமோஷன் செய்யப்படும் பிரபல ஹீரோவின் படம்!

Tuesday, October 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்தினம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இந்த படத்திற்காக செய்யப்பட்ட பிரம்மாண்டமான புரோமோஷன் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. சமூக வலைதளங்கள் முதல் தண்ணீர் பாட்டில் வரை செய்த புரோமோஷனின் அறுவடை தான் தற்போது ரூ.400 கோடி வசூல் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் போலவே கார்த்தி நடித்த 'சர்தார்’ படத்திற்கும் வேற லெவல் புரோமோஷன் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் படக்குழுவினர்களின் பேட்டிகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டது

அதேபோல் 'சர்தார்’ ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பெரிய பேனர்கள் திரையரங்குகளில் வைக்கத் தொடங்கி விட்டன என்பதும் பொது இடங்களில் இந்த படத்தின் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கும் பணி தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ஆட்டோக்கள் பேருந்துகள் ஆகியவற்றிலும் 'சர்தார்’ படத்தின் போஸ்டரை ஒட்ட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அது மட்டுமின்றி சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று புரமோஷன் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இரண்டு வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை லைலா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார் என்பதும், இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பதும் இந்த படம் தீபாவளியன்று பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.