'மதகஜ ராஜா'வை அடுத்து இன்னொரு தாமதமான படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’மதகஜ ராஜா’ என்ற திரைப்படம் உருவாகி 12 ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான நிலையில் சமீபத்தில் தான் இந்த படம் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.
இதனை அடுத்து ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி உள்ள சில படங்களை ரிலீஸ் செய்ய அந்தந்த படக்குழுவினர் முயற்சி செய்து வரும் நிலையில் அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த வகையில் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இருக்கும் ’ஆலம்பனா’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வைபவ், பார்வதி நாயர், பால சரவணன், ரோபோ சங்கர், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாரி கே விஜய் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் கௌதம் மேனனின் ’துருவ நட்சத்திரம்’ உட்பட மேலும் சில காலதாமதமான படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Fwoooomp! Your playful Genie is finally bringing you the wholesome fun! 🧞✨
— KJR Studios (@kjr_studios) February 3, 2025
Get ready for #Aalambana – the magical entertainer, grandly releasing on March 7th, 2025 worldwide! 😄🪄#AalambanaFromMarch7🔮@actor_vaibhav @paro_nair @dir_parikvijay @hiphoptamizha @koustubhent… pic.twitter.com/MmxHkiVDnO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com