close
Choose your channels

18 வருடங்களுக்கு பின்னர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கவுதமி?

Wednesday, October 14, 2015 • தமிழ் Comments

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக 'பாபநாசம்' படத்தில் ரீ எண்ட்ரி ஆன நடிகை கவுதமிக்கு ரசிகர்கள் கொடுத்த அமோக ஆதரவு காரணமாக மீண்டும் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'த்ரிஷயம்' தமிழ் ரீமேக் படத்தில் நடித்த கவுதமி, தற்போது மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் சந்திரசேகர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கவுதமி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த 1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக நடித்த கவுதமி, சரியாக 18 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தின் மூலம் ஜோடி சேரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz