close
Choose your channels
Rajavamsam

தனுஷை அடுத்து கையில் வாளை தூக்கிய சூர்யா: வெறித்தனமான ஸ்டில் வைரல்!

Friday, April 9, 2021 • தமிழ் Comments

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ’சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட சூர்யாவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சூர்யா 40’ படத்தின் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. கையில் நீளமான வாள், வேஷ்டி சட்டையுடன் கலர்ஃபுல்லாக வெறித்தனமாக சூர்யா இருக்கும் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள ’கர்ணன்’ திரைப்படத்தில் தனுஷ் கையில் வாளுடன் பல காட்சிகளில் தோன்றும் நிலையில் அடுத்ததாக கையில் வாளுடன் சூர்யா தனது அடுத்த தோன்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டி இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz