close
Choose your channels

கார் பைக்கை அடுத்து சிலம்பம் கற்கும் பிக்பாஸ் நடிகை

Thursday, September 3, 2020 • தமிழ் Comments

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை குஷி ஆக்கி வந்தனர். ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா இந்த கொரோனா விடுமுறையில் பல உருப்படியான காரியங்களை செய்துள்ளார். 

முதலில் பைக் மற்றும் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு அதுகுறித்த வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். தற்போது அவர் சிலம்பம் கற்று வருவதாகவும் கூறி சிலம்பம் சுற்றும் வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனக்கு பாண்டியன் மாஸ்டர் தான் சிலம்பம் கற்று கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதுமிதா, கலையரசன் நடிக்கும் ’டைட்டானிக்’ மற்றும் ஜிவி பிரகாஷின் ’ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz