close
Choose your channels
aranmanai

அனிருத்தை அடுத்து யுவன்ஷங்கர் ராஜா.. இளம் நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

Friday, June 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் நடிகரான கவின் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவின் நடித்த ’டாடா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படம், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படம் உள்பட அவரது படங்களின் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கவின் மற்றும் இளன் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே 9 நாள் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் முதலில் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த நிலையில் அதன் பின்னர் திடீரென கவின் இந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு ’ஸ்டார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படம் வளர்ந்து வரும் ஒரு இசை கலைஞர், மிகப்பெரிய ஸ்டாராக எப்படி உருவானார் என்ற கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது. இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கவின் - சதீஷ் இணையும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில் கவின் - இளன் படத்திற்கு யுவன் இசையமைப்பதால் கவினுக்கு டபுள் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment