close
Choose your channels

எச் வினோத் இயக்கும் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகர் தான் ஹீரோவா?

Friday, July 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ என்ற படத்தை இயக்கி வரும் எச்.வினோத் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

’சதுரங்க வேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான எச் வினோத் அதன் பின்னர் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கினார். இதனையடுத்து அஜித்தின் மூன்று படங்களை தொடர்ந்து இயக்கி உள்ளார். ‘ நேர்கொண்டபார்வை’ ’வலிமை’ ஆகிய படங்களை அடுத்து தற்போது ’ஏகே 61’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி அல்லது டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எச். வினோத் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘ஏகே 61’ படத்தை முடித்த பின்னர் இந்த படத்திற்கான வேலைகளை அவர் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. எச் வினோத்- விஜய் சேதுபதி கூட்டணி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.