close
Choose your channels
Rocketry
Yaanai

18 ஆண்டுகள் கழித்து 'கில்லி' பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற த்ரிஷா: வைரல் வீடியோ

Tuesday, May 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை த்ரிஷா 18 ஆண்டுகள் கழித்து ‘கில்லி’ படம் எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பார்ட் பகுதிக்கு சென்று உள்ள புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யுடன் த்ரிஷா நடித்த திரைப்படம் 'கில்லி’ என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முக்கிய காட்சிகள் மதுரையில் படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான நிலையில் 18 ஆண்டுகள் கழித்து தற்போது த்ரிஷா மதுரை சென்று உள்ளார். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன் எடுத்த வீடியோ மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார், இந்த வீடியோவும் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

நடிகை த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘தி ரோட்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.