close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர்கள்!

Sunday, May 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகளும் அஜித்துக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

அதேபோல் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’இன்று பிறந்தநாள் காணும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், தாங்கள் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில், ‘பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.