close
Choose your channels

ரசிகர்களின் செல்போனை பிடுங்கி, கூட்டத்தில் தூக்கியெறிந்த திரை பிரபலம்.. அதிர்ச்சி வீடியோ..!

Monday, February 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலக பிரபலம் ஒருவர் ரசிகரின் செல்போனை பிடுங்கி கூட்டத்தினர் மத்தியில் தூக்கி எறிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை எடுத்து அந்த பிரபலத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பிரபல பாடகர் ஆதித்ய நாராயணன் என்பவர் சமீபத்தில் சத்தீஸ்கர் என்ற பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சிலர் அவரை செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் வீடியோக்கள் எடுத்தனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆதித்ய நாராயணன் ஒரு ரசிகரின் செல்போனை பிடுங்கி கூட்டத்தில் தூக்கி எறிந்தார். இதனால் பெரும் சர்ச்சை ஆகி உள்ளது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதையடுத்து ஆதித்யா நாராயணனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆதித்ய நாராயணனுக்கு எவ்வளவு திமிர்? அவரால் ரசிகர்களை மதிக்க கூட முடியாதா? ரசிகர்கள் இல்லாமல் அவர் எப்படி இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியும்? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் செல்பி எடுக்கும் போது அவர்களது செல்போனை பிடுங்கி தூக்கி எறிந்த சம்பவங்கள் சர்சையாக உள்ள நிலையில் தற்போது பாடகர் ஆதித்ய நாராயணனின் சம்பவமும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.