close
Choose your channels
siren
lal_salaam

அதிதி ஷங்கரின் வைரல் வீடியோ: 'தென்மாவட்ட தேவதை' பட்டம் கொடுத்த ரசிகர்கள்!

Thursday, September 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் கார்த்தி ஜோடியாக முத்தையா இயக்கத்தில் உருவாகும் ’விருமன்’ என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார் என்பதும், அந்த படத்தில் அவர் வீரமுள்ள தேன்மொழி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அதிதி ஷங்கர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கள மொழி பாடல் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதில் அவர் தனது தலைமுடியை ஒரு சுழற்று சுழற்றி கோதிவிடும் காட்சியை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியால் திணறி வருகின்றனர்.

மேலும் ’தென்மாவட்ட’ தேவதை என்ற படத்தையும் ரசிகர்கள் அவருக்கு கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போகிற போக்கை பார்த்தால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மிக குறுகிய காலத்தில் அதிதி ஷங்கர் முன்னேறி விடுவார் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.