close
Choose your channels
Por
Joshwa

அடுத்த பட படப்பிடிப்பிற்காக போர்ச்சுக்கல் செல்லும் அதிதி ஷங்கர்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

Monday, July 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’மாவீரன்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் நடித்து வரும் மூன்றாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது என்பதும் இதில் அதிதி சங்கர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் என்ற நகரில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து அதிதி சங்கர் உட்பட படக்குழுவினர் இன்று போர்ச்சுகல் செல்ல இருப்பதாகவும் அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படமும் வெற்றி பெற்றால் அதிதி ஷங்கருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.