close
Choose your channels
Viruman
Laal

பாதகத்தி என்னை ஒரு பார்வையால கொன்ன: அதிதிஷங்கரின் வைரல் வீடியோ

Thursday, October 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் தற்போது ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், கார்த்தி ஹீரோவாகவும் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் மதுரையில் தொடங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அதிதி ஷங்கர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அந்த வகையில் சற்று முன் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தி ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற ‘அய்யோ’ என்ற பாடலுக்கு சூப்பராக ஆக்சன் கொடுத்து உள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும், ரசிகர்களின் லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.